• Sep 20 2024

'உப்பு சப்பு இல்லாத கதை' - மாவீரன் படத்தை வெளுத்து வாங்கிய பயில்வான்..! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மண்டேலா படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள மாவீரன் படம் இன்று ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் மாவீரன் படத்தின் கதை குறித்தும் அந்த படத்தின் விமர்சனத்தையும் கூறியுள்ளார். காமிக்ஸ் ஆர்ட்டிஸ்ட் சத்யா ஒரு பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்து கார்ட்டூன்களை வரைந்து வருகிறார். நதிக்கரையோரத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டித் தருகிறது.

அதில், குடியேறும் குடும்பங்களில் சிவகார்த்திகேயன் குடும்பமும் ஒன்று. போராளியின் மனைவி சரிதா. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு பகுதியாக உடைந்தும் இடிந்தும் விழ, அதை எதிர்த்து அமைச்சர் மிஷ்கினை கேள்விக் கேட்கிறார் சரிதா.

இந்த வயதிலும் உடல் பருமன் ஆனாலும் நடிகை சரிதாவின் நடிப்பு சிறப்பாகவே உள்ளது. அம்மா ஒவ்வொரு முறையும் எதிர்த்து கேள்வி கேட்க, அப்பாவியான சிவகார்த்திகேயன் பிரச்சனை வேண்டாம்மா அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போயிடலாம் என அவரை அடக்கி வைத்துக் கொண்டே இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் திடீரென சிவகார்த்திகேயனுக்கு அசரீரி குரல் கேட்க ஆரம்பித்ததும் இவர் மாவீரனாக மாறி மிஷ்கினையும் அவரது ஆட்களையும் பந்தாடுவது தான் இந்த படம்.

 விருமன் படத்தில் கிடைத்த அளவுக்கு கூட அதிதி ஷங்கருக்கு இந்த படத்தில் ரோல் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் அழகாகவும் இல்லை, கவர்ச்சியாகவும் இல்லை, நடிப்பும் முகத்தில் வரவில்லை, சுத்த வேஸ்ட் என பயில்வான் ரங்கநாதன் அதிதி ஷங்கரை டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் உப்பு சப்பு இல்லாத கதை. ஆனால், எந்தளவுக்கு இதை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியுமோ இயக்குநர் மடோன் அஸ்வின் கொண்டு சென்றிருக்கிறார்.

மடோன் அஸ்வினுக்கு பதிலாக மடோனா சபாஸ்டியன் இயக்கிய படம் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசியது தான் ஹைலைட். மாவீரன் பெரிய சூப்பர் ஹிட் படம் என்றெல்லாம் சொல்ல முடியாது சுமாரான படம் தான். ஒருமுறை பார்க்கலாம் என தனது விமர்சனத்தை பயில்வான் ரங்கநாதன் முடித்துக் கொண்டார்.

Advertisement

Advertisement