• Nov 10 2024

துணிவு & வாரிசு... ரியல் கலெக்‌ஷன் என்ன? - திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு 11.01.2023 அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியானது

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  அத்தோடு 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரித்த இப்படத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அதே 11.01.2023 அன்று வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா என முக்கிய நட்சத்திர  பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.  தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகியுள்ளது.

வாரிசு படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார்.அத்தோடு சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அத்தோடு , வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.


இதனிடையே வாரிசு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும், நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும் தகவல்கள் கூறப்பட்டு வந்தன.

இவ்வாறுஇருக்கையில் இப்படங்களின் கலெக்‌ஷன் ரிப்போர்ட்ஸ் பற்றி பேசியுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்,  “உண்மையிலேயே யார் வின்னர் என்பது படம் ஓடி முடியும்போது தான் தெரியும். அத்தோடு கலெக்‌ஷன்களை பொறுத்தவரை வின்னரா ரன்னரா என்பதை அந்தந்த விநியோகஸ்தர்கள் சொன்னால்தான் துல்லியமான தகவல் தெரியவரும். சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அது தெரியும். அத்தோடு அவர்களுக்கும் உலகம் முழுவதும் எவ்வளவு ஓவர்சீஸ் கலெகஷன் என்று கணக்குக்கு வர நாட்கள் ஆகும். ஏனென்றால் அவர்களிடம் இருந்து படத்தை பணம் கொடுத்து வாங்கிச் செல்லும் விநியோகஸ்தர்கள், சரியான தகவலை திரும்ப சொல்ல வேண்டும்.

அத்தோடு முதல்நாள் மட்டும் வெளிநாட்டில் ஒரு படம் ஒரு ஷோ முதலில் திரையிட்டிருப்பார்கள். அதனால் ஒரு வித்தியாசம் முதல் நாளில் மட்டும் கலெக்‌ஷனில் இருக்கும். ஆனால் இரண்டாவது நாளெல்லாம் சரிக்கு சமம் ஆகிவிடும். எங்களது தியேட்டரிலேயே இரண்டு படங்களுக்கும் சமமாகவே கலெக்‌ஷன்கள் வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement