• Sep 21 2024

குடும்பத்தாருடன் சேர்ந்து கணபதி பூஜையில் ஈடுபட்ட முக்கிய நடிகையின் அசத்தலான புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ரவீனா டாண்டன் ஆவார். இவர் சினிமாப்  பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த நடிகை என்பதால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இலகுவில் கைகூடி வந்தன.


அதுமட்டுமல்லாது இவரது தந்தை ஒரு பட தயாரிப்பாளர் ஆவார். ரவீனா 1991 இல் ஹிந்தியில் வெளிவந்த  ' கத்தார் கி புல் ' என்ற  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால்பதித்தார்.


இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன அதுமட்டுமல்லாது சினிமாவில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய ரவீனாவுக்கு பல பிலிம்பேர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரவீனா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். இந்நிலையில் நேற்றைய தினம் கணபதி சதுர்த்தி விரதம் வட இந்திய மக்களால் மிகச் சிறப்பாகக்  கொண்டாடப்பட்டது. 


இந்நிலையில் ரவீனா தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கணபதி சதுர்த்தியை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடி இருந்தார். அது மட்டுமல்லாது அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனைப்  பார்த்த ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருவதை காணலாம். 



Advertisement

Advertisement