• Nov 19 2024

விஜய் சேதுபதி மகனை டார்ச்சர் செய்கிறாரா ஸ்டண்ட் இயக்குனர்? சின்னப்பையன் தாங்குவானா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்து வரும்ஃபீனிக்ஸ்என்ற படத்தை ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் அதிக சண்டை காட்சிகள் இருப்பதால் விஜய் சேதுபதி மகனை அனல் அரசு டார்ச்சர் செய்து வருவதாகவும், சின்ன பையன் இந்த டார்ச்சரை தாங்குவானா என்று படக்குழுவினர்களே புலம்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

பல வெற்றி திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து அனல் அரசு தற்போதுஃபீனிக்ஸ்என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகி உள்ளார். இந்த படத்தின் தொடக்க விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

முதலில் இந்த படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்று கூறியே விஜய் சேதுபதி மகனை ஒப்பந்தம் செய்ததாகவும் இப்போதே 7  சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தில் மொத்தம் 15 க்கும் மேற்பட்ட சண்டை காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் சண்டைக் காட்சி இயல்பாக வரவேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி மகன் சூர்யாவை அனல் அரசு டார்ச்சர் செய்து வருவதாகவும் சின்ன பையன் இவ்வளவு ஆக்சன் காட்சிகளை தாங்குவாரா என யூனிட்டில் உள்ளவர்களே புலம்பி வருவதாக தெரிகிறது.

ஆனால் சண்டை காட்சியில் நடிப்பதென்றால் தனக்கு மிகவும் விருப்பம் என்றும் இதற்காக ஆறு மாதம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் கண்டிப்பாக இந்த படம் எனக்கு நல்ல ஒரு எண்ட்ரியை கொடுக்கும் என்று சூர்யா கூறியுள்ளதாக கூறப்படுகிறது

விஜய் சேதுபதி மகன் சூர்யா, விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத், அபி நக்ஷத்ரா, சத்யா NJ, சம்பத், ஹரீஷ் உத்தமன், திலீபன், 'அட்டி' ரிஷி, பூவையார் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில் சாம் சிஎஸ் இசையில் இந்த படம் உருவாகிறது.

Advertisement

Advertisement