• Nov 17 2024

முட்டாள் தனமான முடிவு..என் பையனுக்கு தற்போது 8 வயசு...முதன் முறையாக மனம் திறந்த போட்டியாளர்..வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. கடந்த செப்டம்பர் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறியிருந்தனர். இந்த நிலையில் இவர்களை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாது எஞ்சி இருக்கின்ற அனைத்துப் போட்டியாளர்களுக்குமே அதிகளவிலான ரசிகர்கள் இருப்பதனால் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துச் சென்ற வண்ணமே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக முக்கியமான போட்டியாளர்களாக அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் ஜொலிக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில்...நான் எமோஷ்னலாக ரொம்ப வீக்..யாரும் சிரிச்சாலும் நம்பிடுவேன் யாரும் அழுதாலும் நம்பிடுவேன் என மனமுடைந்து ADK விக்ரமனிடம் கூறி வருத்தப்படுகின்றார்.நான் எல்லாத்தையும் இழந்திட்டு இருக்கேன்.நான் முட்டாள்தனமான முடிவு எடுக்கிறதாலை என் பொண்டாட்டி மற்றும் பையனை விட்டுட்டு இருக்கேன்.

என் பையனுக்கு தற்போது 8வயசு ஆயிடுச்சு..என கண்ணீர் வடித்து கூறும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement