• Nov 19 2024

விக்ரம், வேதாவிற்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்த தந்தை... அதிர்ச்சியில் சுப்பிரமணி... சூப்பரான 'Modhalum Kaadhalum' serial promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'மோதலும் காதலும்'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் விக்ரமின் தந்தை ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றார். அப்போது அங்கு வந்த வேதாவின் தந்தை "தன்வி தான் கிடைச்சிட்டாளே அப்புறம் எதுக்கு சோகமாக இருக்கீங்க" எனக் கேட்கின்றார்.


பதிலுக்கு விக்ரமின் தந்தை என் பையனுக்கு அடுத்த வருட இறுதிக்குள் கல்யாணம் பண்ணி வைக்கணும் அதுதான் என் ஆசை என்கிறார். பதிலுக்கு வேதாவின் தந்தை சட்டுப்புட்டுன்னு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தானே என்கிறார்.

அதற்கு விக்ரமினி தந்தை "தன்விக்கு ஒரு நல்ல அம்மாவாக இருக்கணும் என்பதற்காக பாக்கிற எல்லாப் பொண்ணுங்களையும் என் பையன் வேணாம் என்கிறான்" எனக் கூறுகின்றார். பதிலுக்கு "எனக்கும் இதே மாதிரி ஒரு பிரச்சினை இருக்கு, என் பொண்ணு குழந்தை பெத்துக்க முடியாது என்ற காரணத்துக்காக யாருமே அவளை கல்யாணம் பண்ணிக்கல, ஆனால் அவளை மாதிரி தாய்மை உள்ள பெண் கிடைக்கிறது அரிது" என்கிறார் வேதாவின் தந்தை.  


பின்னர் விக்ரமின் தந்தை "சுப்பிரமணி சார் நாங்க விக்ரம் வேதாக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமா" எனக் கேட்கின்றார். இதனை கேட்டதும் சுப்பிரமணி அதிர்ச்சி அடைகின்றார்.


Advertisement

Advertisement