விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.
விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.
பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். இந்நிலையில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படமும், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகிறது.
என்னதான் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களது ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய்யை போட்டி நடிகர்களாகவே பாவித்து வருகின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜில்லா மற்றும் வீரம் படங்களுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளன. தற்போது வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு தங்கள் படத்திற்கு சமமான திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்பது போல பேசியுள்ளார்.
மேலும் இதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்த உதயநிதியை சந்திக்கபோவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தில் ராஜு விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஸ்டார், எனவே அவர் படங்களுக்கு அதிக திரையரங்கங்கள் கிடைக்கவேண்டும் என சொன்னது அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளது.
அஜித் மற்றும் விஜய் இருவரும் சமபலத்துடன் இருக்கையில் தில் ராஜு எப்படி விஜய் தான் நம்பர் ஒன் என சொல்லலாம் என்று அஜித் ரசிகர்கள் தில் ராஜூவை விமர்சித்து வருகின்றனர்.
Listen News!