தமிழ் சினிமாவில் ஃபஹத் ஃபாசிலுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் தான் மாமன்னர். தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம்வருகிறார்.
இவர் அறிமுகமான சில படங்கள் அவருக்கு ஆரம்பத்தில் சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. இருந்தாலும் தனது திறமையின் மூலம் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிபெற்றார். இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.
இந்த நிலையில், ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ படத்தின் விமர்சனம் பற்றி பார்ப்போம்.
‘ஆவேஷம்’ படத்தில் கேரளாவை சேர்ந்த பிபி, அஜி, சாந்தன் ஆகிய மூன்று பேர் இன்ஜினியரிங் படிக்க பெங்களூரில் பெரிய கல்லூரிக்கு செல்கிறார்கள். அங்கு சீனியர்கள் ரேக்கிங் செய்ய, அவர்களிடம் மோதினால் என்ன பலன் கிடைக்குமோ அதுதான் மூவரின் கதியும்.
அவ்வாறு மூன்று பேரையும் நாட் கணக்கில் கொண்டு போய் சாப்பாடு போட்டு அடித்து வெளுக்கிறார்கள் சீனியர்கள் . தங்களை அடித்தவர்களை எப்படியாவது திருப்பி அடிக்க வேண்டும் என்று, உள்ளூர் ரவுடிகளை தங்களது நண்பர்களாக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒவ்வொரு வைன் ஷாப்பாக சென்று அங்கு இருப்பவர்களுடன் பழக முயற்சிக்கிறார்கள். அப்படி கடைசியாக போய் சேரும் இடம் தான் ரங்காஎனும் பகத் பாசில்.
இதைத் தொடர்ந்து மூவரும் அவருடன் நெருங்கி பழகத் தொடங்குகிறார்கள். அவரும் இந்த மூவர் மேலும் அளவுகடந்த அக்கறை காட்டுகிறார். சேர்ந்து குடிப்பது, சண்டைகளை பார்க்க கூட்டி செல்வது, ரங்காவை வைத்து தம்மை அடித்த சீனியர்களை புரட்டி எடுத்து கல்லூரியில் பிரபலமாகிறார்கள்.
ஆனால் இந்த மூவருக்கும் பிரச்சனை சீனியர்களால் இல்லை ரங்காதான் என்பது கொஞ்சம் லேட்டாக தான் புரிய வருகிறது. அது என்ன பிரச்சனை? பாசமாக இருக்கும் ரங்காவுக்கு பின்னால் என்ன கதை இருக்கு என்பதுதான் மீதி கதை.
கேங்ஸ்டர் படம் என்றாலே பில்டப் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்கும். அதேபோலத்தான் இந்த படத்திலும் உள்ளது. பெரிய பெரிய ரவுடிகளின் கூட்டத்திற்கு தலைவனாக இருக்கும் ரங்கா, யாரை எப்படி அடிக்க வேண்டும் என்று தான் அடையாளங்களிடம் சொல்வது தான் அவருடைய வேலை. தனது அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படியே ரங்கா யாரையும் அடிப்பதில்லை என்று ஒரு பிளாஷ்பேக் சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் சீரியஸான காட்சிகள் எல்லாம் ரங்காவின் செயல்கள் காமெடியாகவே முடிகின்றன. உண்மையாகவே இவர் கேங்ஸ்டர் தானா இல்லை ஊரை ஏமாற்றுகிறாரா என்ற சந்தேகமும் பார்வையாளர்களுக்கு எழும்பும் நேரத்தில் அவரின் நடிப்பு வாயை பிளக்க வைத்து விடுகின்றன.
இதன் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு காமெடியும் ஆக்சனும் கலந்த ஒரு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சைலண்டாக இருந்து மிரட்டும் கேங்ஸ்டாராக அல்லாமல் ஒரு காமெடியான உடல் மொழியை வைத்து நம்மை சிரிக்க வைக்கும் பஹத் ஃபாசில், அடுத்த காட்சியில் கொடூரமாகவும் இரக்கமில்லாத ஒருவராகவும் வெள்ளை சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு சட்டைகிழியாமல் சண்டை செய்யும் பகத் பாசிலே பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
Listen News!