தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். அந்தவகையில் அஜித்தின் 'என்னை அறிந்தால்', கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', உதயநிதி ஸ்டாலினின் 'நிமிர்', விஜய் சேதுபதி உடன் 'சீதக்காதி' போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் இருந்து விலையுயர்ந்த கடிகாரம், லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை காணாமல் போனதாக கடந்த அக்டோபர் மாதம், போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அந்தப் புகாரில் தனது வீட்டில் பணிபுரியும் சுபாஸ் சந்திரபோஸ் தான் இதை திருடி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைகளை நடத்தி வந்தனர். அதன் போது சுபாஸ் சந்திரபோஸ் பார்வதி நாயர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறினார். அதாவது அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தன்மீது எச்சில் துப்பி அசிங்கப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே கடந்த மாதம் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற பார்வதி நாயர் சுபாஸ் சந்திரபோஸ் தன்னுடைய புகைப்படத்தை தவறான முறையில் பயன்படுத்தி மிரட்டி வருவதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அதுதொடர்பாக போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஸ் சந்திரபோஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் ஆனது மீண்டும் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!