நடிகர் வடிவேலுவின் தாயார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து வரும் நடிகர் வடிவேலு மதுரையில் பிறந்ததால், இவருக்கு வைகைப்புயல் என ரசிகர்கள் பட்டம் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 1988 ல் வெளியான "என் தங்கை கல்யாணி " யில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் முதலில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், அரண்மனை கிளி படங்களில் இவரது தனிப்பாணி நகைச்சுவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அத்தோடு தமிழ் சினிமாவில் இவரது நகைச்சுவை திறமைக்கு தீனி போடும் வகையில் அடுத்தடுத்து படவாய்ப்புக்கள் அமைந்தன.
அதன் பின்னர் ஒரு கட்டத்தில் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகி விட்டார். எனினும் அதே போல் சில சர்ச்சைகளால் சினிமா பக்கம் மீண்டும் தலைகாட்டாமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" மூலம் ரீஎண்டரி கொடுத்துள்ளார்.
அவர் தமிழ் சினிமாவில் எத்தனை உயரங்களுக்கு சென்றாலும் அவரது குடும்பம் மதுரையிலேயே வாழ்ந்து வருகின்றது.
இந்நிலையில் வடிவேலுவின் தாயார் வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர் திடீரென நேற்று இரவு காலமானார்.அவருக்கு தற்போது 87 வயது.வடிவேலு வீட்டில் மூத்தவரின் உயிரிழப்பு குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Listen News!