தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக விசாகப்பட்டினத்தில் இடம் பெற்று வருகின்றது.
அத்தோடு கடந்த சில நாட்களாகவே அப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் கூட விஜய் மற்றும் ராஷ்மிகாவின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவின.
இதற்கிடையே விஜய் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.எனினும் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனினும் தற்போது விஜய் மற்றும் ஷாருக் கான் சந்தித்து கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி இருக்கிறது. ஆனால் அந்த புகைப்படம் Fake என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தான் நடந்து வருகிறது. ஏற்கனவே அப்படத்தில் தீபிகா படுகோன் புதிதாக இணைந்துள்ள நிலையில் விஜய்யும் இப்படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Listen News!