• Sep 20 2024

பாலிவூட் திரையுலகில் ஏற்பட்ட திடீர் சோகம்- அட இந்த நடிகருக்கா இந்த நிலைமை?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பழம்பெரும் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி பல தசாப்தங்களாக சினிமா துறையில் உள்ளார்.இவர் ஹிருத்திக் ரோஷனுடன் கோய் மில் கயா, சன்னி தியோலுடன் காதர் ஏக் பிரேம் கதா, சத்யா, பன்டி அவுர் பப்லி, க்ரிஷ், தால், ரெடி, அசோகா மற்றும் ஃபிசா உள்ளிட்ட மிகப்பெரிய பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

அவர் பல விளம்பரங்கள் மற்றுதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இணைய நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்த குலாபோ சிதாபோ தான் இவர் நடித்த கடைசி படம்.

இந்த நிலையில் இவர் அண்மையில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததோடு லக்னோவில் சிகிச்சை பெற்று வந்தார்.இதனை அடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில் காலமானார்.இவரது இறப்பிற்கு திரையுலகைச்சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement