விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.
படக்குழுவினர் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பினை நடத்தி வந்தனர்.அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பையனூரிலும் ஷுட்டிங்கை நடத்தினார்கள்.அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது. லோகேஷ் புலிப்பாய்ச்சலில் ஷூட்டிங்கை நடத்திவருவதாக படத்தில் நடித்து முடித்த மிஷ்கின் சமீபத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே லியோ படத்தின் கதை குறித்த தகவல் வெளியானது. அதன்படி, ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் விஜய் பேக்கரி வைத்து வாழ்வார் எனவும், அவருக்கு சகோதரராக அர்ஜுன் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. மேலும் சஞ்சய் தத் விஜய்க்கு தந்தையாக நடிக்கிறார் என்றும் அவரும் படத்தில் கேங்ஸ்டர்தான் எனவும் கூறப்பட்டது.
மேலும் இதனைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்து. இப்படியான நிலையில் தற்பொழுது இப்படத்தின் டைட்டில் குறித்து லீக் ஆகியுள்ளது. அதாவது இப்படத்திற்கு லியோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது லியோ படத்தின் பின்னர் வெளியாகும் என வெங்கட் பிரபு ஓர் இன்டர்வியூவில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!