• Nov 14 2024

பெண் பாக்ஸரின் கதையை திருடி படமெடுத்த சுதா கொங்கரா! புதிய சர்ச்சையில் இறுதிச்சுற்று

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி உள்ள சுதா கொங்கரா, இவற்றுக்கு அடுத்ததாக சூர்யாவின் புறநானூறு படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில், 'இறுதிச்சுற்று' படத்தை துளசி எனும் பெண் பாக்ஸரின் கதையை திருடித்தான் சுதா கொங்கரா எடுத்துள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இது தொடர்பில் குறித்த பெண் பேட்டியொன்றும் அளித்துள்ளார்.

ஏற்கனவே, தமிழ் சினிமாவில் இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பிரச்சனை பெரிதாகி வரும் நிலையில், அவர் இயக்குனராக அறிமுகமான இறுதிச்சுற்று திரைப்படம் ஏழை பாக்ஸிங் பெண்ணின் கதையை திருடி எடுக்கப்பட்ட படம் என்கிற சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.


அதன்படி, குறித்த துளசி என்ற பெண்ணிடம் 'தனக்கு கமிஷனர் எல்லாம் தெரியும்' என சுதா கொங்கரா மிரட்டி,  தன்னிடம் இருந்து கதையை பெற்றதாகவும், அதன்பின் தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டார்  எனவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது கிளம்பி இருக்கும் பிரச்சனை அந்தப் படத்திற்கும் சிக்கலை உருவாக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதேவேளை, இறுதிச்சுற்று படம் வெளியாகும் முன்னதாகவே டாக்குமென்ட்ரி படமாக துளசியின் கதை 2013ம் ஆண்டு Light Fly, Fly High  என்கிற டைட்டிலில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement