சுகன்யா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்து ரசிகர்கள் சுகன்யாவுக்கு லேடி கமல்ஹாசன் என்று பெயர் வைத்தார்கள்.
மேலும் இவர் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சுகன்யா. பின்னர் சின்னக் கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் சுகன்யா. அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களில் நடிகையாகவும், நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்திருக்கிறார்.
நடிப்பை தவிர, பரத நாட்டிய கலைஞர், பாடகி, பின்னணி குரல் கலைஞர் என பல திறமைகளைக் கொண்டிருக்கிறார் சுகன்யா.
இதற்கிடையே கடந்த 25-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சுகன்யா..இதோ அந்த புகைப்படம்
Listen News!