தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்து தற்பொழுது நடிகராக மாறியிருப்பவர் தான் மாரிமுத்து. இது தவிர கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களையும் இயக்கியிருக்கின்றார். இதனை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.
இதனை அடுத்து பல திரைப்படங்களில் குணச்சித்திரவேடங்களில் நடித்து வரும் இவர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர், கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.இது தவிர சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்னும் சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
ஆணாதிக்க சிந்தனையுடனும், எப்போதும் திமிராகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேரக்டரை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.குறிப்பாக அவர் தொண்டையை செருமுவதும், ஏய் இந்தாமா என்ற வசனமும் சமூக வலைதளங்களில் வெகு பிரபலம்.
இந்த நிலையில் தற்பொழுது இவரது பேச்சு ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது.தனியார் சேனல் ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மாரிமுத்து. அது ஜோதிடர்கள் vs ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் நடந்தது. அப்போது பேசிய மாரிமுத்து, "இந்தியாவை பின்னோக்கி இழுப்பதே இந்த ஜோதிடக்காரர்கள்தான். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முதல்வராக முடியாது என இந்தியாவில் உள்ள ஜோசியக்காரனும் சொன்னான். ஆனால் அவர் முதலமைச்சராகிவிட்டார். இப்போது முகத்தை தூக்கி எங்கே வைத்துக்கொள்வீர்கள்.
ரஜினிகாந்த் பிறந்த நொடியில் இந்தியாவில் 57,000 குழந்தைகள் பிறந்தனர். ஏன் ரஜினிகாந்த் மட்டும் சூப்பர் ஸ்டார் ஆனார். ஏனென்றால் அவர் உழைத்தார் அதனால் சூப்பர் ஸ்டார் ஆனார். எந்த ஜோதிடக்காரனாவது சுனாமி வரும் என்று சொன்னாரா?, கொரோனா வரும் என்று சொன்னாரா? வந்த பிறகு எதையாவது சொல்லக்கூடாது என கூறினார்.
அந்த சமயத்தில் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஒரு ஜோதிடர் வீராவேசமாக எழுந்து, 'நீங்க சாதாரண நடிகர் நாங்க யார் தெரியுமா என்ன நினைச்சு இப்படி பேசிட்டு இருக்கீங்க என்றார். அதற்கு மாரிமுத்தோ எதையுமே யோசிக்காமல், நான் அந்த கடவுளையே நம்பாதவன். சும்மா உட்காருயா. யாருய்யா நீங்கள் எல்லாம்" என Thug பதிலை கொடுத்து அந்த ஜோதிடரை வாய மூட வைத்துள்ளார். இந்த பேட்டி ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!