• Sep 20 2024

வெளியானது சுனைனாவின் 'ரெஜினா' பட ட்ரெய்லர்... அழுகையும் ஆக்ரோஷமுமாக வெளிவந்த வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இறுதியாக நடிகை சுனைனா நடிப்பில் 'லத்தி' திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனையடுத்து தற்போது இவரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ரெஜினா'.  இந்தப் படத்தை டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். அத்தோடு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். 


மேலும் இப்படத்தில் நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளதோடு சதீஷ் நாயர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் உடைய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பின்னணியில் பவா செல்லதுரையின் குரல் ஒலிக்க, மர்மங்கள் நிறைந்த காட்சிகள் அழகாக காட்டப்படுகின்றன. அத்தோடு ஆக்ரோஷம், அழுகை, கொலை என ரத்தமும், சதையுமாக கட் செய்யப்பட்டுள்ள ட்ரெய்லர் படத்தின் தன்மையை ரசிகர்களுக்கு நன்கு உணர்த்துகிறது.

இதோ அந்த ட்ரெய்லர் வீடியோ..!


Advertisement

Advertisement