சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அரண்மனை சீரிஸ் படங்களில் இந்த படம் தான் அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனை செய்துள்ளது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’அரண்மனை 3’ திரைப்படம் சுமாரான வசூலை பெற்ற நிலையில் 'அரண்மனை 4’ படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் தயங்கியதாகவும் சுந்தர் சி மிகவும் இறங்கி வந்து குறைந்த விலைக்கு தருவதாக சொல்லியும் கூட அந்த நிறுவனங்கள் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூலை குவித்து வரும் நிலையில் தற்போது ஓடிடி மற்றும் சாட்டிலைட் நிறுவனங்கள் ’அரண்மனை 4’ படத்தை அதிக விலைக்கு வாங்க முன் வந்த போது அதைவிட அதிக விலையை சொல்லி சுந்தர் சி அதிர்ச்சி கொடுத்ததாகவும் முன்பு தான் கொடுக்க முடிவு செய்த தொகையை விட இரு மடங்கு கேட்டதை அடுத்து வேறு வழியின்றி ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக தற்போது ஓடிடி நிறுவனங்கள் ரிஸ்க் எடுப்பதில்லை என்றும் ஒரு படம் நன்றாக ஓடிய பிறகு அந்த படத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று தான் முடிவு எடுக்கின்றன என்றும் அதனால் தான் ’கோட்’ படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் கூட குறைந்த விலைக்கு விற்பனையானதாக கூறப்பட்டது.
அந்த வகையில் திரை உலகினர்களை கடந்த சில மாதங்களாக தவிக்க விட்டு வந்த ஓடிடி மற்றும் சாட்டிலைட் நிறுவனங்களை சுந்தர் சி அலற வைத்துள்ளது தயாரிப்பாளர் வட்டத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமன்னா புண்ணியத்தில் ‘அரண்மனை 4’ சூப்பர்ஹிட் ஆகியதால் தான் சுந்தர் சிக்கு அதிக லாபம் என கூறப்படுகிறது.
Listen News!