• Nov 19 2024

சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறாரா-குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்வை ஆரம்பித்து 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அத்தோடு பிரபல இயக்குநரான சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றார்.

இவ்வாறு இருக்கையில் சுந்தர் சி - நடிகை குஷ்புவின் மூத்தமகள் அவந்திகா சினிமாவில் நடிக்க தயாராகி விட்டார்.

மேலும் இதுகுறித்து குஷ்பு பதிவிட்டுள்ளதாவது….

எனது மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்து விட்டார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கப் போகிறார்.

ஆனால் அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. மேலும் நீங்கள் அவரை வாழ்த்த வேண்டுமென்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து குஷ்பூவை பாலோ செய்யும் ரசிகர்கள், குஷ்புவை போலவே அவரது மகள் அவந்திகாவும் சினிமாவில் புகழ் பெற வேண்டுமென்று வாழ்த்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement