இந்தியா-கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு இடம்பெற்றது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த பெண் ஒருவர் தனது ஹால் டிக்கெட்டை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார்.
எனினும் அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் அறிவித்துள்ளார்.
இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார்.
அத்தோடு, இது குறித்து தேர்வு குழுவினர் விசாரித்த போது அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் சொல்லப்பட்டது.இந்த ஹால் டிக்கெட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, தேர்வு மைய பொறுப்பாளர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளர் பி.ஆர்.நாயுடு, ''கர்நாடக மாநில கல்வித் துறை கவனமின்றி செயல்படுகிறது,'' என குற்றம் சாட்டியுள்ளார்.vனினும் இதற்கு பதிலளித்துள்ள மாநில கல்வித் துறை அமைச்சர் நாகேஷ், ''தேர்வர்கள் பதிவேற்றும் படம் தான் அனுமதிச் சீட்டில் பதிவாகும்.
''அந்தப் பெண்ணிடம் விசாரித்தோம். தன்னுடைய விபரங்களை, தன் கணவரின் நண்பர் பதிவேற்றியதாக சொன்னார். அந்த நபரிடம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்று தெரிவித்தார்.
Listen News!