• Sep 20 2024

விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியாகிய சூப்பர் ஹிட் தகவல்- அட இத்தனை நிமிடங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். அத்தோடு இப்படத்தில் விஜய்சேதுபதி ,பகவத் பாசில், சூர்யா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.

அத்தோடு சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் மொத்தம் 173 நிமிடங்கள் ஓடும் எனவும் அமெரிக்காவில் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கே பிரிமீயர் காட்சி திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement