• Sep 20 2024

வெளியானது லவ் டுடே படத்தின் ‘சாய்ச்சிட்டாளே…’ சூப்பர்ஹிட் வீடியோ பாடல்..குவியும் லைக்ஸ்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். மேலும் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார்.


மேலும் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும்  இப் படத்துக்கான தியேட்டர் காட்சிகளும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. 


அதுமட்டுமல்லாமல் லவ் டுடே இயக்குனராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் இப் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.


மேலும் இப் படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப் படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.


இந்நிலையில் லவ் டுடே திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது. நேத்து வெளியாகியுள்ள சாய்ச்சிட்டாளே வீடியோ பாடல் வியூஸ் மற்றும் லைக்குகள் குவிந்து வருகின்றது.

Advertisement

Advertisement