தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் முக்கியமானவராக இருப்பவர் தான் மிர்ச்சி சிவா. இவர் தற்பொழுது ஆர் கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.இப்படத்தில் சிவாவுடன் யோகிபாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, ஷிவாங்கி, புகழ் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் குறித்து தற்பொழுது வெளியாகியுள்ளது.அதவது இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த திரைப்படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இத் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளமும் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!