• Sep 20 2024

பழனிச்சாமி பாக்கியாவை லவ் பண்ணுவதை வீட்டில் சொன்ன கோபி... அம்மா சொன்ன பதிலால் அதிர்ச்சி... சூப்பரான ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்காக தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றனர். இதில் பாக்கியாவின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டும் விதமாகவே பல பெண்கள் இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். அதிலும் பெண்கள் மட்டுமல்லாமல் தற்போது பல ஆண்களும் கூட இந்த சீரியலை தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் பழனிச்சாமியை போட்டுக் கொடுப்பதற்காக நேராக பழனிச்சாமியின் வீட்டிற்குப் போன கோபி பழனிச்சாமியின் அம்மாவிடம் "உங்க பையன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறான்" என்கிறார். பதிலுக்கு அம்மாவும் "நல்ல விஷயம் சொல்லி இருக்காய், உடனே அவங்க வீட்டில் பேசி கல்யாணத்தை முடிச்சிடலாம்" என்கிறார்.


இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோபி "உங்க பையனுக்கு பிடிச்சிருக்கிறது என்னோட மனைவியை" எனக் கூறிப் பதறுகின்றார். அதற்கு பழனிச்சாமியின் அம்மா "உங்களுக்குள்ள தான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொன்னாங்களே" என்கிறார். இதனால் கோபி ஷாக் ஆகின்றார்.


Advertisement

Advertisement