• Sep 21 2024

மனைவியின் கையோடு கை கோர்த்த வெற்றி... அபி கொடுத்த ரியாக்ஷன்... சூப்பரான ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் அபி வெற்றியினுடைய ஊர்த் திருவிழாவிற்கு காரில் கிளம்பி செல்கின்றார். அப்போது இடையில் வண்டி பழுதடைந்து நிற்கின்றது. இதனைத் தொடர்ந்து அபி தனக்கு உடனடியாக வேறு வேண்டி ஒழுங்கு செய்து தருமாறு கூறுகின்றார்.

அதேபோன்று அந்த டிரைவரும் வேறு ஓர் வண்டியை அரேஞ்ச் பண்ணி கொடுக்கின்றார். அதே வண்டியில் தான் வெற்றியும் வருகின்றார். பின்னர் அபியும் வெற்றியும் சேர்ந்து வெற்றியின் வண்டியிலேயே செல்கின்றனர்.


பின்னர் ஊர்த் திருவிழாவில் கலந்து கொண்ட வெற்றி அபியின் கையைப் பிடிக்கின்றார். அபியோ உதறி எறிகின்றார். பதிலுக்கு வெற்றி "ஊர்க்காரனுங்க எல்லாரும் பார்த்திட்டு இருக்காங்க அப்போ தான் புருஷன் பொண்டாட்டி சந்தோசமாக இருக்காங்க என்று நம்புவானுங்க"எனக் கூறி மீண்டும் கையைப் பிடிக்கின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement