• Sep 20 2024

சூப்பர் சிங்கர் மானசியா இது..? பாடகிக்கு பதிலாக இவங்க நடிகை ஆகி இருக்கலாம் போல... என்ன ஒரு அழகப்பா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபல சேனல்களில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. இது பல சாதாரண மக்களையும் சாதனையாளர்களாக மாற்றி இருக்கின்றது. அவ்வாறு சாதனையாளர்களை உருவாக்கக் கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'சூப்பர் சிங்கர்'. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரே மானசி.

அதாவது இவர் சூப்பர் சிங்கர் சீசன் 8 இல் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய காந்தக் குரலினால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அதே சேனலில் ஒளிபரப்பான 'ஸ்டார்ட் ம்யூசிக்' நிகழ்ச்சியிலும் பணிபுரிந்து இருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த 'அன்பறிவு' படத்தில் முக்கிய பாடல் ஒன்றை பாடியிருந்தார். இவ்வாறாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்ற மானசி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர்.


அதுவும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் மானசி, தான் பாடும் வீடியோ அல்லது தனது புகைப்படங்களை பதிவு செய்து வருவது வழமை. அதேபோன்று தற்போதும் ரவுசர் அணிந்து புகைப்படங்களை எடுத்து அதனை தனது அழகிய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் ஹீரோயின் மாதிரியே இருக்கின்றார்.


இதனைப் பார்த்த மானசி ரசிகர்கள் "பாடகியாகியமைக்கு பதிலாக நீங்கள் நடிகை ஆகி இருக்கலாம்" என தமது பாணியில் கமெண்டுகளை பதிவு செய்து வருவதோடு, அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement