• Sep 20 2024

திருமண ஆடையில் பிரைடல் லுக்கில் போட்டோ ஷுட் நடத்திய சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ- ட்ரெண்டிங்கில் கலக்கும் புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான்  நித்யஸ்ரீ . இந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று வரை சென்ற இவர் NithyaFied எனும் பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி அதில் ஃபேஷன், பாடல், டப்மேஷ் என கலக்கி வருகிறார்.


மேலும் அதர்வா நடிப்பில் வெளியாகியிருந்த ஈட்டி படத்திலும் அதர்வாவுக்கு சகோதரியாக நடித்திருந்தார். இதுதவிர இன்ஸ்டாவிலும் செம ஆக்டிவாக இருக்கும் நித்யஸ்ரீ அவ்வப்போது ஃபோட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் தென்னிந்திய திருமண ஆடைகளின் களஞ்சியமாக இருக்கும் தனியார் ஷாப்பிங் கடைக்காக நித்ய ஸ்ரீ மற்றும் ஆனந்த் அரவிந்த் நடத்திய பிரைடல் லுக் புகைப்படங்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளன.


ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பல விளம்பர ஷூட்கள், ஃபோட்டோ ஷூட்களை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது




Advertisement

Advertisement