தமிழில் ‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள்.
.தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் செந்தில் கணேஷ் மனைவி ராஜலட்சுமியும் நாயகியாக களமிறங்கி வருகிறார். தற்போது ராஜலட்சுமி ‘Licence’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
என்னதான் தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவு வந்துவிட்டாலும் இன்னமும் பாடல் பாடுவதை விடாமல் இருந்து வருகிறார்கள் இந்த தம்பதி. அதே போல இவர்கள் சொந்தமாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றியம் வைத்திருக்கிறார்கள்.
இதனால் அடிக்கடி பல பாடல்களை இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பெயரில் ராஜலட்சுமி புதிய பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதனால் வரை நாட்டுப்புறப் பாடல்களையும் குத்துப் பாடல்களையும் பாடி வந்த ராஜலட்சுமி முதல் முறையாக ஆங்கிலத்தில் பாடி அசத்தியிருக்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!