இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். அத்தோடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.
மேலும் விருமன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது. இதனால் படத்தை காண ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே இப்படத்தின் மூலம் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அத்தோடு தனது முதல் திரைப்படத்திலே யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் அதிதி ஷங்கர்.
மேலும் மதுரை வீரன் என தொடங்கும் அந்த பாடல் அதிதி ஷங்கர் மற்றும் யுவன் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் இப்பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி தானாம்.
அவர் தான் இப்பாடலை முதலில் பாடியுள்ளார், ஆனால் திடீரென அவரின் குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கரை பாட வைத்தாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி பெரிய ஏமாற்றத்திற்கு ஆளானதாகவும் சொல்லப்படுகிறது.
பிற செய்திகள்
- தமிழ்நாட்டின் ஆலியா பட் ஷங்கரின் மகளா…புகழ்ந்து தள்ளிய இயக்குநரால் அதிதி கொடுத்த ரியாக்ஷன்..!
- ரஜனியே ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை அறிவித்தார்-குஷியில் ரசிகர்கள்..!
- ‘பிக்பாஸ் சீசன்-6 இல் நுழையப்போகும் அந்த 5 பேர்-அடடே நம்ம புது ஹீரோவுமா…யாரும் எதிர்பார்க்காத ருவிஸ்ட்..!
- லிப்லாக் காட்சிகள்… ரிலீசுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய லெஸ்பியன் படம்-எதிர்ப்பை தெரிவிக்கும் கிறிஸ்தவர்கள்..!
- விரைவில் திருமணமாகப்போகும் நடிகை ஹன்சிகாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா…வெளியான வீடியோவால்…சொக்கிப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!