எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
தயாரிப்பாளர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.இது ஒரு புறம் இருக்க இதனை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள 62 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது ஜனவரி 17ம் திகதி ஆரம்பமாகுவதோடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!