• Sep 20 2024

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் யோகிபாபு இயக்கத்தில் வெளியான மண்டேலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் மடோன் அஸ்வின்.காமெடியுடன் சமூக அக்கறையுள்ள விஷயத்தை பேசிய இந்தப்படத்திற்காக தேசிய விருதினையும் இவர் பெற்றார்.இதனை அடுத்து மாவீரன் படத்தை இயக்கி வருகின்றார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக  இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.மிஷ்கினுக்கான போர்ஷன் சமீபத்தில்தான் முடிவடைந்தது. 


இப்படம் ஜூலை மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.மாவீரன் படம் முதலில் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. எனவே மாவீரன் படத்தை ஒரு மாதம் முன்னதாக அதாவது ஜூலை மாதம் 14 தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவித்தது.


இந்நிலையில் மாவீரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுவதற்கான உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் சில நாட்களுக்கு முன்புதான் மாவீரன் படத்துக்கான டப்பிங்கை முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement