• Sep 21 2024

ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- எப்போது ரிலீஸ் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலும் நடித்திருக்கின்றார்.

இந்தப்படத்தின் முழு ஷுட்டிங்கும் நிறைவடைந்த நிலையில் முதல் அப்டேட்டாக 'காவாலா' என்ற பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர். பர்ஸ்ட் சிங்கிளாக அனித்ரூதின் இசையில், தமன்னாவின் குத்தாட்டத்துடன் வெளியான இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் பர்ஸ்ட் சிங்கிளில் சூப்பர் ஸ்டாரை விட தமன்னாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தன.


இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அதிரடி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'இது டைகரின் கட்டளை' என்ற இரண்டாவது பாடல் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இதற்காக படக்குழுவினர் பிரத்யேக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இந்த அப்டேட் தற்போது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியனாக நடிக்கும் 'ஜெயிலர்' படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement