அண்ணாத்த படம் வெளியாகி சில மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை.
மேலும் இந்த படத்தின் பணிகள் எப்போதுதான் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும், அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது.
அதன்பிறகு பீஸ்ட் படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனத்திற்கு பின்னர் இயக்குநர் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என்று ரஜினியே சூசகமாக தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது.அதேநேரம் விரைவில் அமெரிக்கா செல்ல ரஜினி, ஜூன் மாதம் இறுதிக்குள் இந்தியா திரும்பிவிடுவாராம்.
இதைத்தொடர்ந்து வரும் ஜூலை மாதமே படப்பிடிப்பை தொடங்க நெல்சன் முடிவு செய்துள்ளார். இதையடுத்து வேகமாக படப்பிடிப்பை நடத்தவிருக்கும் நெல்சன், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவல்கள் ரசிகர்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!