• Nov 17 2024

உதயநிதியின் கடைசி படம் என்பதால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு முக்கிய அழைப்பு விடுத்த மாரி செல்வராஜ்-மாமன்னன் பட சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பல வருடங்கள் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.

படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது.


முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.


இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது

இந்நிலையில் படமானது ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த்தையும், கமல் ஹாசனையும் கலந்துகொள்ள வைக்க உதயநிதி ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் கடைசியாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒன்றாக கலந்துகொண்டிருந்தனர். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு மாமன்னன்தான் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement