தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் நடிப்பில் தற்போது 'கங்குவா' என்ற படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இந்தப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
இந்தப்படம் மூலம் சிறுத்தை சிவா, சூர்யா இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப்படம் தயாராகி வருகிறது. மேலும் இந்தப்படத்திற்கான சேட்டிலைட், டிஜிட்டல் மற்று ஆடியோ உரிமைகள் பல கோடி ரூபாய்க்கு விற்று தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
'கங்குவா' படத்தினை பத்து மொழிகளில் இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. அத்துடன் இந்தப்படத்தில் பல கெட்டப்களில் நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சூர்யாவின் 42 வது படமாக 'கங்குவா' உருவாகி வரும் நிலையில் அவரின் 43 வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி 'சூரரைப் போற்று' படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிவி பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஜிவி 100' என பதிவிட்டுள்ள நிலையில், இது 'சூர்யா 43' படம் குறித்த அறிவிப்பதாக தான் இருக்கும் என இணையத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!