• Nov 17 2024

நயன்தாரா-விக்னேஷ் திருமணத்தில் கலந்துகொள்ளும் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல பிரபலங்கள் காதல் திருமணம் செய்திருக்கின்றனர். அந்த வகையில் அண்மையில் நிக்கி கல்ராணி மற்றும் ஆதியின் திருமணம் நடைபெற்றது. இவர்களைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் மாதம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் அங்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் பிரபல இணையதளம் ஒன்று நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாவலிபுரத்தில் நடக்க உள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணம் திரையுலகை சேர்ந்த வெகு சிலருக்கே அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதால் அவருக்கு அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisement

Advertisement