• Nov 11 2024

மீனாவை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

90களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே டாப் நடிகையாக இருந்தவர் மீனா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதனை் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தென்னிந்திய டாப் ஹீரோக்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்து விட்டார்

தமிழில் கடைசியாக ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் நடித்தார். புகழின் உச்சியில் இருந்த போதே கடந்த 2009 ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் வித்யாசாகர் சமீபத்தில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும் இதன் பிறகு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீனாவை போனில் தொடர்பு கொண்டு அவருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பிறகு முத்து, வீரா போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

48 வயதாகும் வித்யாசாகரின் உடல், மருத்துவமனையில் இருந்து இறுதிச் சடங்குகளுக்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் நடைபெறும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement