• Sep 20 2024

ஷங்கரின் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அட இதனால் தான் அர்ஜுன் நடிச்சாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

1999ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப்படமாக "முதல்வன்" திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல், ரகுவரன், விஜயகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஹிந்தியில் "நாயக்" என மறு தயாரிப்பு செய்யப்பட்டது. அத்தோடு இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றது. இந்நிலையில் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் முதலில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்க ஒப்பந்தமானதாக கூறப்படுகிறது.

இதை பற்றி நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் பேட்டி ஒன்றில் இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் முதல்வன் பட கதையை எழுதினார். ரஜினிகாந்திடம் பட கதையை கூறும் போது அவருக்கும் பிடித்து விட்டது.

ஆனால் அச்சமயத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பாப்பரப்பாக பேசப்பட்டதால் முதல்வன் படத்தில் நடிப்பது சரிப்பட்டு வராது என கூறி விட்டாராம். இதன் பின்பே இயக்குநர் ஷங்கர் முதல்வன் படத்தினை அர்ஜுனை வைத்து இயக்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement