• Nov 14 2024

மராட்டிய முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே-ஐ மீட் பண்ண சூப்பர் ஸ்டார்... ! வைரலாகும் புகைப்படம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெய் பீம் இயக்குர் ஞானவேல் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேயின் மட்டோஶ்ரீ இல்லத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்று அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்துள்ளார். உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி, மகன்கள் ஆதித்யா, தேஜஸ் ஆகியோர் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டில் முறையே எந்திரன் பட ப்ரோமோஷன் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் சிவசேனா (உதா) கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை ரஜினிகாந்த் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement