• Sep 20 2024

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை ரசிகர்களுடன் சூப்பராக கொண்டாடிய மனைவி... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டாரு யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும் எனும் பாடலுக்கு அமைய ரஜினிகாந்த்தை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாகவும் விளங்கி வருகின்றார். இவர் இன்றைய தினம் தனது 73 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 


இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக அவர் தயாரித்து நடித்த 'பாபா' திரைப்படமானது சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதாவது இப்படத்தின் கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டு பிரமாண்டமாக வெளியானது.


அதுமட்டுமல்லாது புதிதாக வெளியாகும் படத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அந்த அளவுக்கு ரஜினியின் ரீ-ரிலீசான 'பாபா' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் 400-க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளும் போடப்பட்டன.

அந்தவகையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.


அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தியேட்டரிலேயே பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. அதாவது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் அந்த கேக்கை வெட்டினார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement