இஸ்லாமிய மத கோட்பாடுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக முஸ்லிம் சமூகத்தினர், ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும்.. இதன் காரணமாகவே காஷ்மீர் பைல்ஸ், புர்கா, தி கேரளா ஸ்டோரீஸ் போன்ற திரைப்படங்கள் அவதூறு பரப்பும் வகையில் வெளியாகி வருவதாக கூறி வருகிறார்கள்.
மேலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பலரும், இப்படம் சமூகங்களுக்கிடையே வன்மத்தையும், மத மோதலையும், உருவாக்குவதோடு, அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே மே மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கேரளா ஸ்டோரிஸ் படத்திற்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இப்படத்தை வெளியிட்டால் எஸ் டி பி ஐ பற்றி போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டும் இன்றி, பலர் தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் ஏற்கனவே இப்படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மீண்டும் சில மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் வெளியீட்டில் தலையிட மறுத்து தெரிவித்ததோடு, இப்படத்திற்கு எதிராக எத்தனை வழக்கு தொடர்வீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் குறித்தும் நினைத்து பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!