• Sep 21 2024

சூர்யா 42 படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்- வித்தியாசமான கெட்டப்பில் மாவீரன் போல இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 42.இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கிவரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

வரலாற்று பின்புலத்துடன் உருவாகிவரும் இந்தப் படத்தில் இருவேறு காலகட்டங்களை ஒட்டி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்புலத்துடன் ஒரு கேரக்டரும் அதில் பலவிதமான கெட்டப்புகளும் காணப்படும் என்றும் மற்றொரு கேரக்டர் தற்போதைய காலகட்டத்தை பற்றியது என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது படத்தின் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, சூர்யா 42 படத்தின் டைட்டில் அறிவிப்பை எதிர்கொள்ள ரசிகர்கள் தயாராகுமாறு தெரிவித்துள்ளது. இந்த புதிய போஸ்டரில், நிழல் உருவமாக சூர்யா குதிரையில் காணப்படுகிறார். அவரது அருகில் உடைந்த மலைப்பகுதி காணப்படுகிறது. மேலும் நாய் ஒன்றும் காணப்படுகிறது.


மேலும் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பாக அமைந்துவரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில்லை வருகின்ற ஏப்ரல் மாதம் 16 -ம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கியுள்ளனர். 

Advertisement

Advertisement