இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பல தேசிய விருதுகளைப் பெற்றது. சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து, இருவரும் மீண்டும் இணைய உள்ளனர்.
இவர்கள் கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இப்போது சுதா கொங்கராவுடன் சூர்யா இணையும் படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதால் சுதா கொங்கரா இந்த படத்தின் கதையை தீவிரமாக தயார் செய்து வருகிறாராம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசுகையில், இது ஒரு வாழ்க்கை வரலாறு படம் அல்ல என்பதை விளக்கினார். சூர்யாவுடன் சுதா கொங்கரா மீண்டும் இணைந்து, கேங்ஸ்டர் படத்தை எடுக்கவுள்ளதால், இதற்கு இயக்குநர் நலன் குமாரசாமி படத்தின் திரைக்கதைக்கு உதவ இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சுதா கொங்கராவுடன் இணைந்து தனது புதுப்படத்திற்கான பணிகளை தொடங்க சூர்யா திட்டமிட்டுள்ளார். அதாவது, நடிகர் சுதா கொங்கராவின் படத்திலும் வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ படத்திலும் ஒரே நேரத்தில் ஈடுபடுவதால் சூர்யா மிகவும் பிஸியாகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
Listen News!