நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சூரரைப் போற்று.இப்படத்தினை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.இந்த நிலையில் இப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
நடிகர் சூர்யா பெற உள்ள முதல் தேசிய விருது இது என்பதால், அவர் விருது வாங்குவதை பார்க்க மகன் தேவ், மகள் தியா மற்றும் மனைவி ஜோதிகாவுடன் சென்றுள்ளார். இவர்கள் விமான நிலையம் வந்த போது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோரும் இன்று மாலை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் தேசிய விருதை வாங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#suriyasivakumar #suriya with Family spotted at Mumbai airport 🕺💃🕵️ @viralbhayani77 pic.twitter.com/2VkRXxTI91
Listen News!