• Sep 20 2024

மிரட்டலான லுக்கில் சூர்யா! வெளியானது கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ! செம ஹப்பியில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் கங்குவா திரைப்படத்தின் முன்னோட்டம் கிளிம்ப்ஸ் வீடியோ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சூர்யா பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியாகியிருக்கும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைபயும் பெற்றுவருகிறது.

ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சூர்யா ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 

சூர்யா நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் அவரது பிறந்தநாள் முதல் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கங்குவா படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் மாஸ் காட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த வீடியோவை சினிமா ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள்.


Advertisement

Advertisement