முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், விருமன்.2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க,இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், விருமன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விருமன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகும் நடிகை அதிதி ஷங்கர் குறித்து பேசிய சூர்யா, "அதிதி நீ ஜொலிக்கிறாய். நம்மை சுற்றியுள்ள உலகத்தை நாம் தான் உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. நீங்கள் உங்களைச் சுற்றி அழகான உலகத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். 2D அலுவலகத்திற்கு நீங்கள் வந்த நாள் முதல் அனைவருக்குமே உங்களைப் பிடித்து விட்டது.
அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தீர்கள். உங்களை தண்ணீர் குடிக்கிறீர்களா? சாப்பிட்டீங்களா? என்று அனைவரையும் கேட்க வைத்தீர்கள். நீங்கள் ஒரு ஆற்றலின் மூட்டை. உங்கள் வரவு நல்வரவாகுக! உங்களுக்கான மரியாதையை இந்த சினிமா உலகம் கொடுக்கும். எங்கள் குடும்பம் சார்பாக உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறோம்.
அப்பா அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இந்த துறையில் உங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது" என கூறி உள்ளார்.அதே போல, விருமன் படத்தின் ஒளிப்பதிவாளர் SK செல்வகுமாரின் அருமையான ஒளிப்பதிவு குறித்தும், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு சண்டை காட்சிகள் குறித்தும், தனது கருத்தினை விருமன் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பாலிவூட் திரையுலகில் ஏற்பட்ட திடீர் சோகம்- அட இந்த நடிகருக்கா இந்த நிலைமை?
- நிமிர் படத்தில் நடித்த பிரபல நடிகையின் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்- அதிர்ச்சியில் திரையுலகம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!