• Nov 19 2024

ஐஸ்வர்யா விட்ட அதிரடி சவால்... மருமகளாக வரக்கூடாது என்பதற்காக மகாவிடம் சத்தியம் வாங்கிய சூர்யா... பரபரப்பான 'Aaha kalyaanam' promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்வதால் அவர் அனுபவிக்கின்ற துன்பங்கள், துயரங்கள் என்ன என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. 


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஐஸ்வர்யா தன் தங்கை மகாவிடம் "நீ தான் எனக்கும் கௌதமிற்கும் கல்யாணம் நடக்கக்கூடாது என்று சதி பண்ணிட்டு இருக்காய்" என்கிறார். பதிலுக்கு மகா "அக்கா நீ தப்பா பேசுகிறாய்" என்கிறார். 

அதற்கு ஐஸ்வர்யா "நீ மனசுக்குள்ள போட்டு வச்சிருக்காய் பாரு கணக்கு அது எதுவுமே நடக்காது, அது அத்தனையும் உடைச்சு தவிடு பொடி ஆக்கி அந்த வீட்டிற்கு மருமகளாக வருவேன், அப்போ தெரியும் இந்த ஐஸ்வர்யா யார் என்று" எனக் கூறி சவால் விட்டு செல்கின்றார்.


மறுபுறம் சூர்யா மகாவிடம் "உங்க அக்கா மாதிரி ஒரு பொண்ணு இந்த வீட்டிற்கு மருமகளாக வரக் கூடாது, எனக்கு சத்தியம் பண்ணு" எனக் கூறி மகாவிடம் சத்தியம் வாங்குகின்றார். மகாவும் சத்தியம் பண்ணிக் கொடுக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement