• Sep 20 2024

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ரோலெக்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாகும் சூர்யா- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி இயக்குநராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இப்படத்தில் சூர்யா ரோலெக்ஸ் என்னும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

 கிளைமாக்ஸில் 5 நிமிடம் மட்டும் தோன்றினாலும் இப்படத்தின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இதனால் ரோலக்ஸுக்காக ஒரு தனி படத்தை லோகேஷ் எப்போது இயக்குவார் என ரசிகர்கள் காத்திருந்தனர். அது பற்றி தற்போது சூர்யாவே ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். 


அதாவது லோகேஷ் கனகராஜிடம் இரும்புகை மாயாவி மற்றும் ரோலக்ஸ் ஆகிய கதைகளை கேட்டு இருப்பதாகவும், முதலில் ரோலக்ஸ் படத்தில் தான் நடிப்பேன் என அவர் கூறி இருக்கிறார்.

தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து சூர்யா 43 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் சூர்யா தெரிவித்து இருக்கிறார். மேலும் கங்குவா படத்தின் பின்னர் வாடிவாசல் படத்தில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement