கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 11ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் விருமன்.இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்தது.இயக்குநர் முத்தையா இப்படத்தை இயக்கியிருந்தார்.
சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி கலந்த படமாக உருவாக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார்.
படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கினார்.விருமன் படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்தார்.
சூர்யாவிற்கு, சக்திவேலன் கையில் வைர காப்பை அணிவிக்க வந்த போது முதலில் சூர்யா அதை வாங்க மறுத்து விட்டார். ஆனால் சக்திவேலன் வற்புறுத்தி சூர்யாவின் கையில் வைர காப்பை போட்டு விட்டார். ஆனால் அடுத்த நிமிடமே, நீங்கள் எனக்கு பரசு தந்தீர்கள். பதிலுக்கு நானும் உங்களுக்கு பரிசு தருகிறேன் என சொல்லி அந்த வைர காப்பை விநியோகஸ்தரின் கையில் மாட்டி விட்டார் சூர்யா.
சூர்யா செய்த இந்த செயலின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதற்காக ரசிகர்கள் சூர்யாவை பாராட்டி வருகின்றனர். அத்தோடு உங்களின் ரசிகனாய் இருப்பதில் பெருமைப்படுகிறோம் என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.வருகிற காஸ்ட்லி பரிசை கூட தன்னடக்கம் மற்றும் பெருந்தன்மையுடன் திருப்பி கொடுக்க நல்ல மனசு வேணும் சார். அது உங்க கிட்ட அண்ணா என தெரிவித்துள்ளனர்.
Listen News!