• Sep 21 2024

முக்கிய நபருடன் ஜாலியாக இருக்கும் 'சூர்யா 42' பட நாயகி.. அதுவும் இவரா.. கொடுத்து வைச்ச ஆளுப்பா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் பிகினி ராணியாகத் திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. இவர் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 42' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் நடிகையான திஷா பதானியின் முதல் கோலிவுட் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ராப் இசை பாடகரான ஜாக்சன் வாங் முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில், பாலிவுட் நடிகை திஷா பதானி உடன் இணைந்து ஊரை சுற்றி பார்த்துள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். 


அத்தோடு அவர் திஷா பதானி உடன் ஜாக்சன் வாங் ஜாலியாக டூர் அடித்த நிலையில், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனையும் சந்தித்து சென்றுள்ளார். எது எவ்வாறாயினும் "சூர்யாவின் ஜோடி தற்போது ஹாங்காங் பாடகருடன் இப்படி ஜோடி போட்டு சுற்றுகிறாரே என்ன விஷயம்" என பாலிவுட்டில் இந்த விடயமானது பேசுபொருளாக மாறி உள்ளது.


Advertisement

Advertisement